கட்சி பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவன்: "சர்ச்சை வீடியோ - சட்டப்படி சந்திப்பேன்"
தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.;
இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி வீடியோ ஒன்று பரவி வருவதாகவும், தன்னையும், கட்சியையும் களங்கபடுத்தவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசனை நடத்தியதாக கூறியுள்ள கே.டி.ராகவன், கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன் என்றும் கே.டி.ராகவன் பதிவிட்டுள்ளார்.