பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் மரணம் - திரையுலகம் அதிர்ச்சி

நடிகை சித்ரா, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...;

Update: 2021-08-21 16:38 GMT
நடிகை சித்ரா, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது... 

1980, 90களில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சித்ரா...

தமிழில் அபூர்வ ராகங்கள் படத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவரது திரைப்பயணம் "அவள் அப்படித்தான்"..."ராஜ பார்வை" என்று தொடர்ந்தது...

குழந்தை நட்சத்திரமாக இருந்த சித்ரா, மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ஆட்டக்கலசம் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் சேரன் பாண்டியன் படத்தில் சரத் குமாரின் தங்கையாக நடித்த சித்ராவை யாரும் எளிதில் மறந்து விட முடியாது...

1987ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்தின் ஊர்க்காவலன் திரைப்படத்திலும், சித்ராவின் கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்பட்டது...

பிரபுவின் சகோதரியாக நடித்த "என் தங்கச்சி படிச்சவ" எனும் திரைப்படம் 100 நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது...

மதுமதி, பொண்டாட்டி ராஜ்ஜியம், கோபாலா கோபாலா உட்பட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சித்ரா அடுத்தடுத்து நடித்து அசத்தினார்...

தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகளில், நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ஒரு நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானதால் நல்லெண்ணெய் சித்ரா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்...

திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்த சித்ரா, மாரடைப்பால் உயிரிழந்த செய்தி திரையுலகினரையும், மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்