ரூ.3 லட்சம் கொள்ளையடித்த விவகாரம் - ஆந்திராவைச் சேர்ந்த இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மூன்று லட்சம் ரூபாய் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-08-05 06:22 GMT
புதுப்பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர், அரசு மருத்துவமனையில் பணியாற்றி மே மாதம் ஓய்வு பெற்றார். இதனிடையே, கடந்த மாதம் 7ஆம் தேதி தனது ஓய்வூதிய பணம் மூன்று லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பணத்தை பறித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட செங்கம் போலீசார், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், அங்கையை என்ற இருவரை கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்