"மேகதாது : தமிழக அரசை கட்டாயப்படுத்தக் கூடாது" - ராமதாஸ் வலியுறுத்தல்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரஷெகாவத் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
இது குறித்து அறிக்கை வெளியிட்ட ராமதாஸ், மேகதாதுவில் அணை கட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதியளித்திருப்பதாக எடியூரப்பா தெரிவித்திருப்பது மத்திய அரசு கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படுகிறதோ என்ற அச்சம் எழுவதாக தெரிவித்துள்ளார். மேகேதாது விவகாரத்தில், தமிழகத்தை பாதிக்கும் வகையில் கர்நாடகத்திற்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.