"ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள்" - போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

கட்டப்பஞ்சாயத்து , கந்துவட்டி, கஞ்சா கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

Update: 2021-07-14 08:13 GMT
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தென் மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். தென் மண்டலத்தில் உள்ள ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்க ஆலோசனை வழங்கினார். ரவுடிகள் மீதான பழைய வழக்குகளை துரிதப்படுத்தி, அதிகபட்ச தண்டணை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கட்டப்பஞ்சாயத்து , கந்துவட்டி , கஞ்சா கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை தரம் பிரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டார். பின்னர் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தேனி காவலர் ஜோதிராஜ் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை, அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்