"அரசு அதிகாரிகளை மிரட்டினால் நடவடிக்கை" - எம்.எல்.ஏ. மணிகண்ணன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அதிமுக, திமுகவினர் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாமிடுவதால், பரபரப்பு நிலவி வருகிறது.;

Update: 2021-07-06 21:47 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அதிமுக, திமுகவினர் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாமிடுவதால், பரபரப்பு நிலவி வருகிறது. முன்னதாக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு தலைமையில், 200-க்கும் மேற்பட்டோர் திருநாவலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குள் புகுந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தகவலறிந்து, கட்சி நிர்வாகிகளுடன் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்ற திமுக எம்.எல்.ஏ., மணிகண்ணன், நடந்தவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசு அலுவலகத்திற்கு வருபவர்கள் மக்கள் பிரச்சினை குறித்து பேச வேண்டும். அதை விட்டுவிட்டு அரசு அதிகாரிகளை மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்