ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக பிரச்சினை - 3 முறை நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பான பிரச்சினையில் ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்;

Update: 2021-07-01 06:05 GMT
திருக்கோவிலூர்-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டள்ள மக்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. துலுக்கபாளையம் ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக இரு கிராமமக்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வட்டாட்சியர் ஆனந்தன் தலைமையில் 3 முறை சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பிரச்சினையான ஏரியில் அரசே மீன்பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதை ஒப்புக்கொண்ட மணகுப்பம் கிராமமக்கள் ஆவணத்தில் கையெழுத்திட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துலுக்கபாளையம் கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ஏரியில் அரசு சார்பில் மீன்பிடிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்