மின் தடையால் வீதியில் நின்ற மக்கள்.. கத்தியால் தாக்கிய போதை நபர்
சென்னை அருகே மின் தடை ஏற்பட்ட சமயத்தில், தெருவில் நின்றவர்களை போதை நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.;
மின் தடையால் வீதியில் நின்ற மக்கள்.. கத்தியால் தாக்கிய போதை நபர்
சென்னை அருகே மின் தடை ஏற்பட்ட சமயத்தில், தெருவில் நின்றவர்களை போதை நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.தேனாம்பேட்டை தாமஸ் சாலை பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள், தெருவில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டே ஓடி வந்துள்ளார். அவரை, அப்பகுதியினர் விசாரித்தபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அங்கு நின்றவர்களை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர் அதே பகுதியை சேர்ந்த நீலமேகம் என்பதும், அவர் போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.