சூடுபிடிக்கும் கேரளா தங்கம் கடத்தல் வழக்கு.. அமீரக தூதரகத்துக்கு நோட்டீஸ் - அடுத்து என்ன?

கேரள தங்கம் கடத்தில் வழக்கு தொடர்பாக , டெல்லியில் உள்ள அமீரக தூதரகத்திற்கு, வெளியுறவுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2021-06-30 05:51 GMT
சூடுபிடிக்கும் கேரளா தங்கம் கடத்தல் வழக்கு.. அமீரக தூதரகத்துக்கு நோட்டீஸ் - அடுத்து என்ன? 

கேரள தங்கம் கடத்தில் வழக்கு தொடர்பாக , டெல்லியில் உள்ள அமீரக தூதரகத்திற்கு, வெளியுறவுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலமாக தங்கம் கடத்தல் நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக துணை தூதரின் நிர்வாக செயலாளராக  பணிபுரிந்து வந்த  ஸ்வப்னா சுரேஷ் , பிஆர்ஓ சரித்குமார் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இந்த வழக்கை சுங்க இலாகா, என்ஐஏ மற்றும் மத்திய அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் , சரித்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  அமீரக  தூதரகத்தின் துணை தூதர் ஜமால் உசேன் அல்சாபி, மற்றொரு உயர்  அதிகாரி  ராஷிக் காமிஸ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே 2  பேரும் துபாய் சென்று விட்டதால், அவர்களிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் துபாயில் உள்ள 2 பேரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா, மத்திய வெளியுறவுத் துறையிடம் அனுமதி கோரியது. இதுதொடர்பான நடவடிக்கைகளை தற்போது மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி வெளியுறவுத் துறையானது, டெல்லியில் உள்ள அமீரக  தூதரகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒரு  நாட்டின் தூதரகத்துக்கு நோட்டீஸ் கொடுப்பது இதுவே  முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்