பின்னலாடை நிறுவனங்களை திறக்க வேண்டாம்; உயிருக்கு உத்தரவாதம் இல்லை - சைமா கீதாஞ்சலி கோவிந்தப்பன் வீடியோ

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் திறப்பது குறித்து சைமா சங்கத்தின் சார்பில் கீதாஞ்சலி கோவிந்தப்பன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2021-06-07 05:53 GMT
திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் திறப்பது குறித்து சைமா சங்கத்தின் சார்பில் கீதாஞ்சலி கோவிந்தப்பன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் 10 % பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்கு திறக்கவேண்டாம் என்றும், பனியன் நிறுவனங்களை திறந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் துணை நிற்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்