7 மருத்துவமனைகளில் இரு மின்வழித்தட வசதி - மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

சென்னையில் கூடுதலாக ஏழு மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் இரு மின்வழித்திட வசதி செய்யப்பட்டுள்ளதாக, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-03 15:00 GMT
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, கூடுதலாக 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில், இரு மின்வழித்தட மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கொளத்தூர் அரசு மருத்துவமனை"சேப்பாக்கம் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், தாம்பரம் சானடோரியம் டிபி மருத்துவமனை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் இந்த சேவையில் இணைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி,  
இதன்மூலம், ஒரு மின்வழித்தடத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதிகபட்சம் மூன்று விநாடிகளில் மற்றொரு மின்வழித்தடத்தின் மூலம் மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  இந்த சேவை சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்