புகைப்பிடிப்பவரா நீங்கள் ? - உஷார்!

மற்றவர்களை காட்டிலும், புகைப்பிடிப்பவர்கள் தீவிர கொரோனா பாதிப்புக்கு ஆளாவது மட்டுமின்றி, உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறது, உலக சுகாதார அமைப்பு.... விவரமாக பார்க்கலாம் தற்போது...

Update: 2021-06-02 14:04 GMT
புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என தெரிந்தும் கூட, அதனை ஏற்க மறுத்து, புகைப்பழக்கத்திற்கு அடிமையாவோர் இங்கு பலர்.... மன அழுத்தத்தை குறைக்கவே புகைப்பிடிக்கிறோம் என கூறுபவர்களை மன குழப்பத்திற்கு ஆளாக்கியுள்ளது, இந்த கொரோனா.... புகைப்பழக்கம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாமா? கூடாதா ? என சந்தேகங்கள் ஒரு புறம்.. தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் மறுபுறம்.... இதனால் ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள பலரும் தயக்கம் காட்டினர். இந்நிலையில், ஒரு வழியாக மது மற்றும் புகைப்பழக்கம் கொண்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகின.... ஆனால் புகைப்பழக்கத்திற்கு கொரோனா பாதிப்புக்கும் இடையேயான தொடர்பு என்பது மிகவும் கொடியது... என்ற எச்சரிக்கை தற்போது வெளியாகி, புகைப்பழக்கம் உள்ளவர்களை கலங்க செய்துள்ளது... புகைப்பிடிப்பவர்களுக்கு 50 சதவீதம் கூடுதல் தீவிர கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளது, உலக சுகாதார அமைப்பு நுரையீரல் தாக்கி,  உயிர் பறிக்கும் கொரோனா, புகைப்பழக்கம் கொண்டவர்களிடம் வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.. கொரோனா பரவலை தடுக்க, புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என வலியுறுத்துகிறார்கள், மருத்துவர்கள்... அப்படி கைவிடுவதனால் இதய நோய்கள், புற்றுநோய், சுவாச நோய்கள் வருவதையும் தவிர்க்கலாம்புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் இருப்பவர்களும் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுவதாக தெரிவிக்கின்றனர், மருத்துவர்கள்
Tags:    

மேலும் செய்திகள்