கேபிள் ஆபரேட்டர்கள் பணியாற்ற அனுமதி - கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவு

ஊரடங்கு காலத்தில் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2021-06-02 03:34 GMT
ஊரடங்கு காலத்தில் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கேபிள் டி.வி. ஒளிபரப்பில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தடையின்றி சேவை வழங்குவதற்காக கேபிள் ஆபரேட்டர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்கள் துறை சார்ந்த பணியை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் வீட்டிலிருந்தே பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்படும் தொலைதொடர்பு சிக்கல்களை தீர்க்கும் வகையில் தகவல் தொடர்பு ஊழியர்களும் ஊரடங்கு காலத்தில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்