ஊரடங்கால் குழந்தை திருமணம் அதிகரிப்பு - அமைச்சர் எச்சரிக்கை

குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் மீதும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-05-31 13:05 GMT
ஊரடங்கால் குழந்தை திருமணம் அதிகரிப்பு - அமைச்சர் எச்சரிக்கை  

குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் மீதும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து,சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சுமார் 20 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இதில், கொரோனா காலத்தில் 2020ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் 40 சதவீதம் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாகவும்,குறிப்பாக சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 72 பழங்குடி கிராமங்களில் பரவலாக நடைப்பெற்றுள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஊரடங்கால் மாணவிகள் வீட்டிலேயே முடங்கியுள்ளதை பயன்படுத்தி, சில பெற்றோர்கள்  கட்டாய திருமணம் செய்துவைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் கீதாஜீவன் எச்சரித்துள்ளார்.
 
Tags:    

மேலும் செய்திகள்