கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறியும் பணி - அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த உத்தரவு
கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறியும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.;
கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறியும் பணி - அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த உத்தரவு
கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறியும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகளுடன் உள்ளவர்களை கண்டறியும் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த, அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. கடந்த 19ம் தேதி காணொலி காட்சி வாயிலாக சுகாதாரத்துறை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ஆசிரியர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையில், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் உள்ள நபர்களை கண்டறியும் பணியில்… அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பகுதியிலும் 500 நபர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில், நோய்த்தொற்று உள்ள நபர்களை கண்டறியும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.