தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு

தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-05-14 12:21 GMT
தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான கட்டணத்தை 3 வகைகளாக பிரித்து தமிழக அரசு முதல் கட்டமாக அறிவித்துள்ளது. தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முதல் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரத்து 500 ரூபாயும், உயிர்காக்கும் கருவிகள் கொண்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 10 கிலோ மீட்டருக்கு 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்புலன்ஸ் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்