ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-05-04 07:27 GMT
ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் பணியாற்ற மருத்துவ பணியாளர் தேர்வாணையம்  மூலம் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என செவிலியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள் காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தது.சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளது.மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆயிரத்து 212 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.திமுக வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கொரனோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக  பதவியேற்பு விழாவிற்கு முன்னதாகவே ஸ்டாலின் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய இசைவு தெரிவித்து இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்