தமிழகத்தில் மேலும் 18,692 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Update: 2021-04-30 20:32 GMT
தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான நாள் வரை, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்து 692 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 11 லட்சத்து 66 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 46 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு நாளில் 16 ஆயிரத்து 7 பேர் குணமடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்