பைக்கில் பறந்த செயின் திருடன்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருவண்ணாமலையில், சாலையில் சென்ற பெண்ணிடம் 10 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2021-04-11 05:19 GMT
திருவண்ணாமலையில், சாலையில் சென்ற பெண்ணிடம் 10 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜா என்பவரின் மனைவி, சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மர்ம நபர் செயினை திருடிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள நிலையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்