ரூ.64,000 வருவாய் ஈட்டிய மீனவ பெண்கள் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு செய்தார்.

Update: 2021-01-24 04:40 GMT
ராமநாதபுரம் மாவட்டம்  மண்டபத்தில் உள்ள கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு செய்தார்.பிரதான் மந்திரி மத்ஸ்யா சம்பட யோஜனா  திட்டத்தின் கீழ், கடல் கூண்டில் மீன் வளர்ப்பதை அமைச்சர் கிரிராஜ் சிங் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி நிலைத்தில் உள்ள  பொரிப்பகத்தில் பிரத்தியேகமாக உற்பத்தி செய்யப்படும் மீன்குஞ்சுகள், அலங்கார  மீன்வளர்ப்பு ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து இந்த  திட்டம் குறித்த கையேட்டினை வெளியிட்டு பயனாளிகளுக்கு, கடல் இறால் மீன் குஞ்சுகளையும், அலங்கார மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய  உதவி குழுக்களுக்கு வண்ண மீன் குஞ்சுகளையும், கடற்பாசி வளர்ப்பில்  ஈடுபட்டுள்ள மீனவ பெண்களுக்கு விதை பாசிகளையும் அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரிராஜ் சிங், கொரோனா காலத்திலும் பாசி வளர்ப்பின் மூலம் பெண்கள், தலா 64  ஆயிரம் ருபாய் வருமானம் ஈட்டி உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்