"காட்டு யானை தாக்கி இதுவரை 10 பேர் பலி, அரசின் மெத்தனப் போக்கே காரணம்" - ஸ்டாலின் கண்டனம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில், காட்டுயானை தாக்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில், அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-15 08:07 GMT
நீலகிரி மாவட்டம் கூடலூரில், காட்டுயானை தாக்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில், அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது முகநூல் பதிவில், கூடலூரில் பத்து பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த தகவல் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், காட்டு யானைகளால் மக்களின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்தும், அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என்றும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.   


Tags:    

மேலும் செய்திகள்