"அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை" - உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டி
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.;
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக் கூடும் எனவும், பல்கலை. கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாகவும், அவர் கூறினார். மேலும், சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் மாணவர்களுக்கு என்ன வசதிகள் எல்லாம் கிடைக்குமே, அத்தனை வசதிகளையும், அரசு நிதி ஒதுக்கி கல்வி தரம் மேலும் உயர்த்தப்படும் என்றார்.