தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில், வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-08 10:38 GMT
கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில், வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது என உத்தரவிட்டனர். நிரப்பப்படாத இடங்களின் விவரங்களை, பள்ளி வாரியாக வெளியிட வேண்டும் என்றும்,  அரசின் கால அட்டவணையை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். மாணவர் சேர்க்கையை கண்காணிக்கும் குழுவின் அதிகாரிகள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்