சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரை உடலுறுப்புகள் செயல்படவில்லை என மனைவி புகார் - தந்தி டிவி செய்தி எதிரொலி - சிகிச்சை தீவிரம்

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரைக்கு உடலுறுப்புகள் செயல்படவில்லை என்ற புகாரில், தந்தி டி.வி. செய்தி எதிரொலியால் அரசு மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சையை தீவிரபடுத்தியுள்ளது.;

Update: 2020-08-09 03:41 GMT
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரைக்கு உடலுறுப்புகள் செயல்படவில்லை என்ற புகாரில், தந்தி டி.வி. செய்தி எதிரொலியால் அரசு மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சையை தீவிரபடுத்தியுள்ளது. பால்துரைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பால்துரையின் மனைவி  மங்கையர் திலகம், பால்துரையின் உடலுறுப்புகள் செயலிழந்து விட்டதாக கூறி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி மனு அளித்தார். இது தொடர்பாக தந்தி டிவியில் செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே, பால்துரைக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்