தேவாலய கோபுரம் மீதேறி தற்கொலை மிரட்டல் - மாவட்ட எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது
திருச்செந்தூர் அருகேயுள்ள நாசரேத் தேவாலய கோபுரத்தின் மீது ஏறி தமது குடும்பத்தினருடன் போராட்டம் நடத்திய இளைஞர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டார்.;
தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் சேகர அலுவலத்தில், அகஸ்டின் என்பவர் 17 ஆண்டுகளாக எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மனம் உடைந்த அவர், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தேவலாயத்தின் 188 அடி உயர கோபுரத்தின் மீது ஏறி காலை முதல் தற்கொலை மிரட்டல் விடுத்து வந்தார். போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த அகஸ்டினுடன், மாலையில், மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனால், எட்டரை மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது