அரசு மருத்துவமனையை கண்டித்து பல இடங்களில் திமுக போராட்டம் - முறையான சிகிச்சை, உணவு வழங்கவில்லை என புகார்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு முறையாக உணவு வழங்காததை கண்டித்தும், சரியான சிகிச்சை வழங்க கேட்டும், திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2020-07-07 12:29 GMT
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு முறையாக உணவு வழங்காததை கண்டித்தும், சரியான சிகிச்சை வழங்க கேட்டும், திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி, ஈத்தாமொழி, ஆரல்வாய்மொழி உட்பட   22 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்