ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்க அனுமதி - அவசரகாலக் கடன் உத்தரவாத திட்டத்தில் நடவடிக்கை

அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-01 03:06 GMT
அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜுன் 26 ஆம் தேதி நிலவரப்படி, சுமார்  45 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளதாகவும், 30 லட்சத்திற்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தரத் நிறுவனங்கள் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு, 5 ஆயிரத்து 567 கோடி வரை கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்