சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் - காவல்துறை நடவடிக்கை குறித்து கமல்ஹாசன் கருத்து
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.;
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் என்றும் தமது டிவிட்டர் பதிவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.