உணவின்றி தவித்த பறவைகள் - உணவளித்து பராமரிக்கும் இளைஞர்கள்

உணவின்றி தவித்த பறவைகளுக்கு உணவளித்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர், திருச்செந்தூர் பகுதி இளைஞர்கள்;

Update: 2020-05-24 06:40 GMT
ஊரடங்கு உத்தரவில் கூட இளைஞர்கள் சிலர், சீமை கருவேல மரங்களை அகற்றுதல், வேப்பிலை மஞ்சள் அரைத்து கிருமி நாசினி தெளித்தல் போன்ற பல பயனுள்ள பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், திருச்செந்தூர் அருகேயுள்ள காந்திபுரத்தில் உள்ள இளைஞர்கள் உணவன்றி தவித்த பறவைகளுக்கு  உணவளித்து பலரது பாராட்டைப் பெற்றுள்ளனர். இங்குள்ள வாய்க்கால், குளங்களில் நீர் இல்லாத காரணத்தினால் உணவின்றி தவித்த பறவைகளுக்கு அவர்கள் கம்பு,ராகி , அரிசி போன்ற தானியங்கள் மற்றும் தண்ணீர் வைத்து  பராமரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்