"பட்டினிச் சாவை தடுத்த தன்னார்வலர்கள்" - ஸ்டாலின் பாராட்டு
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பேரிடரில் இருந்து மீண்டெழ, தன்னார்வலர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பேரிடரில் இருந்து மீண்டெழ, தன்னார்வலர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "ஏழை எளியோர்க்கு உணவளிக்கும் திமுகவின் முயற்சியில் இணைந்து தமிழகமெங்கும் உணவளிக்கும் தன்னார்வ நிறுவனங்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார். அவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், இப்பேரிடரில் இருந்து மீண்டெழும் நம்பிக்கையை இவர்களின் முனைப்பு அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.