விபத்துக்குள்ளான முன்னாள் ராணுவ வீர‌ர் - உயிருக்கு போராடிய பரிதாபம்

மணப்பாறை அருகே விபத்துக்குள்ளான ராணுவ வீர‌ர் உயிருக்கு போராடிய நிலையில், கொரோனா அச்சத்தால் மக்கள் அவரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுள்ளனர்.;

Update: 2020-04-23 03:20 GMT
மணப்பாறை அருகே விபத்துக்குள்ளான ராணுவ வீர‌ர் உயிருக்கு போராடிய நிலையில், கொரோனா அச்சத்தால் மக்கள் அவரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுள்ளனர்.  திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், மாலை பணி முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த அவர்,  திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முத்தபுடையான்பட்டி என்ற ஊர் அருகே சாலையோரம் இருந்த இரும்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானார். இந்த நிலையில் கொரோனா அச்சத்தால், மக்கள்  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை தொடுவதற்கு அஞ்சியுள்ளனர். இதனால், பலமணி நேரம் துடித்துகொண்டிருந்த முன்னாள் ராணுவ வீர‌ரை ஆம்புலன்ஸ் மீட்டு சென்றது.
Tags:    

மேலும் செய்திகள்