''ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றவில்லை" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக வெளியாகி வரும் செய்திகள் மக்களிடையே அலட்சிய உணர்வை ஏற்படுத்தியிருப்பதாக பாமாக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.;

Update: 2020-04-20 08:21 GMT
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக வெளியாகி வரும் செய்திகள் மக்களிடையே அலட்சிய  உணர்வை ஏற்படுத்தியிருப்பதாக பாமாக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த முறை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை மக்கள் ஓரளவு பின்றபற்றியதாகவும் கடந்த சில நாட்களாக அதை மீறி பொது இடங்களில் சுற்றித்திரிவதாகவும் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினர் பொதுமக்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டும் என்றும் இல்லையென்றால் மே 3க்கு பிறகு மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்