ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்து ஆலோசனை - இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அறிவிப்பு

ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

Update: 2020-04-17 02:30 GMT
ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், 5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் என்றார். இவை வரும் 19ஆம் தேதிக்குள் தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்படும் என்றும், இதனை இயலாதவர்களுக்கு பள்ளிவாசல்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வீட்டிலேயே தொழுகை நடத்துவது, வீட்டிலேயே நோன்பு கஞ்சி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்