அருப்புக்கோட்டை: விதிகளை மீறி பயணித்த 400 -க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 400 - க்கும் மேற்பட்டவர்களின் இரு சக்கர வாகனங்களை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-04-04 11:42 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 400 - க்கும் மேற்பட்டவர்களின் இரு சக்கர வாகனங்களை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பாவடி தோப்பு பழைய பேருந்து நிலையம், பாளையம்பட்டி, பந்தல்குடி ரோடு, புதிய பேருந்து நிலையம், காந்தி நகர் என பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
Tags:    

மேலும் செய்திகள்