தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனி மாணிக்கம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி உள்ளார்.;
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனி மாணிக்கம் தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மன்னார்குடி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட 5 கோடி மதிப்பிலான பணிகளை ரத்து செய்ய வேண்டும் என அந்த மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் அந்த நிதியினை ஒரு கோடி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கும் 4 கோடியை தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக அந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்க்கு கடிதம் எழுதி உள்ளார்