திருச்சி மத்திய மண்டலத்தில் 1,289 பேர் மீது வழக்குப்பதிவு - ஊரடங்கிற்கு அடங்காததால் நடவடிக்கை
திருச்சி மத்திய மண்டலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டு, காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.;
திருச்சி மத்திய மண்டலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டு, காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டு, 802 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட எஸ்.பி.தெரிவித்துள்ார்