நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-25 02:16 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட அளவில், அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. உள்ளாட்சி துறையில் 90 ஆயிரம் களப்பணியாளர்கள், 708 கண்காணிப்பு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 11 ஆயிரத்து 800 கை தெளிப்பான்கள், 890 வாகன தெளிப்பான்கள் பயன்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சென்னை மாநகராட்சிக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 70 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மூலம் தூய்மை பணி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்