மருந்து, மாத்திரைகள் தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் எப்போது சாப்பிட வேண்டும் என ஏன் குறிப்பிட்டு வழங்கப்படுவதில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.;

Update: 2020-03-12 20:08 GMT
அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள்,  எப்போது சாப்பிட வேண்டும் என ஏன்  குறிப்பிட்டு வழங்கப்படுவதில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக கீழக்கரையை சேர்ந்த ராஜு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், நோயாளிகளுக்கு மருத்துவர் எழுதி தரும் மாத்திரைகள் ஒரே கவரில் மொத்தமாக அளிக்கப்படுவதால் அதனை எப்போது சாப்பிடுவது என தெரிவதில்லை என குறிப்பிட்டுள்ளார். எனவே அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் எப்போது சாப்பிட வேண்டும் என குறிப்பிட்டு தனித்தனி உறைகளில் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளர். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருந்து, மாத்திரைகளை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையில் ஏன் வழங்குவதில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு தரப்பு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்