தமிழ்நாடு
"நளினி வழக்குபோல், ரவிச்சந்திரன் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்" - தமிழக அரசு
ராஜீவ் கொலையில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன், தன்னை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்க முடியாது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரவிச்சந்திரன், தாக்கல் செய்த மனுவில், 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள தாம், உடல் நலத்தாலும், மன உளைச்சலாலும் பாதித்துள்ளதால் தன்னை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.
நீதிபதிகள், பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நளினியின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுபோல், ரவிச்சந்திரன் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரியது.
மேலும், 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு, குடியரசு தலைவரின் முடிவுக்காக, தற்போது காத்திருப்பில் உள்ளதை சுட்டிக்காட்டியது.
இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது என்றும், முடிவுகள் எடுக்கப்பட்டால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் கூறினர். 2 வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

