நடிகர் சங்கம் தேர்தல் மீண்டும் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை - ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.;

Update: 2020-03-10 11:39 GMT
நடிகர் சங்கத்தை நிர்வாகிக்க தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் விஷால், நாசர் மற்றும் கார்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ், மூன்று மாதத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்த பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்ததோடு, தொடர்ந்து  நடிகர் சங்கத்தை தனி அதிகாரி நிர்வகிக்கலாம் என்று குறிப்பிட்டனர். இந்த மனுவிற்கு வரும்  ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும்  உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்