திருநள்ளாறு ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில், பிரதோஷ தினத்தை முன்னிட்டு, நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.;
திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில், பிரதோஷ தினத்தை முன்னிட்டு, நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், பால், தயிர், சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.