சத்தியமங்கலம் பகுதியில் கழுதைப் பால் விற்பனை - சங்கு அளவு பால் ரூ. 50

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த கழுதைப் பாலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.;

Update: 2020-03-03 10:11 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த கழுதைப் பாலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. வலிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்கும் எதிர்ப்பு சக்தி மருந்தாக உள்ள கழுதைப் பால், தற்போது அரிதானதாக மாறிவிட்டது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கழுதை வளர்ப்போர், சத்தியமங்கலம் பகுதியில் முகாமிட்டு, பால் விற்று வருகின்றனர். ஒரு சங்கு அளவு பால் 50 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு 50 மில்லி பாலும் விற்பனை செய்யப்படுகிறது. வீதிகள் தோறும் சென்று, கூவிக் கூவி, கண்முன் கறந்து விற்பனை செய்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்