உடல் ஊனமுற்ற, முன்னாள் ராணுவ வீரர் ஓய்வூதியத்துக்கு வரி - உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வரிப் பிடித்தம் செய்த எஸ்.பி.ஐ

இந்திய ராணுவத்தில் பணியாற்றி உடல் ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, பென்ஷனாக 100 ரூபாய் அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-03-03 09:27 GMT
உடல் ஊனமுற்ற, ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரர்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி  மூலம் பென்ஷன் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின்  ஓய்வூதியத்துக்கு வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இந்த நிலையில்,  தற்போது வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது கணக்கில் 100 ரூபாய் மட்டும் வரவு வைக்கப்பட்டது. இந்த சம்பவம், உடல் ஊனமுற்ற, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி எஸ்.பி.ஐ வங்கி வரி பிடித்தம் செய்துள்ளதாக உடல் ஊனமுற்ற முன்னாள் ராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்