இந்தியாவில் வாழ சிறந்த நகரங்கள் எவை? - தமிழகத்தில் இருந்து 7.4 லட்சம் பேர் கருத்து

இந்தியாவில் வாழச் சிறந்த நகரம் குறித்து, நடத்தப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் இருந்து 7 லட்சத்து 43 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2020-03-02 10:15 GMT
இந்தியாவில் வாழச் சிறந்த நகரம் குறித்து, நடத்தப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் இருந்து 7 லட்சத்து 43 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்தியாவில், வாழ சிறந்த நகரங்களுக்கான ஆய்வினை, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகம் நடத்தியது. 118 இடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,  தமிழகத்தில் இருந்து சென்னை உட்பட 10 மாநகராட்சிகள் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 1 தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற ஆய்வில், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்கள் பட்டியலை அமைச்சகம்  வெளியிட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்