"வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update: 2020-02-26 12:05 GMT
மதுரையை சேர்ந்த இம்மானுவேல், மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் சார்பாக  தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள், நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்க வசூல் மையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  4 வாரங்களில் அடிப்படை வசதிகளுக்கான பணி நிறைவடையும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது, என உத்தரவிட்டனர். இதே போல், சிந்தாமணி, வளையங்குளம் சுங்கச்சாவடிகளிலும் வண்டியூருக்கென நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டு, நாளை முதல் இதனை அமல்படுத்த வேண்டும் என கூறி, வழக்கை மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்