"படப்பிடிப்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காப்பீடு"- லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல் கடிதம்

படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-02-25 10:28 GMT
படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், படபிடிப்பு தளங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும்  என்றும் அவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதனை படப்பிடிப்பு நிறுவனம் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்