"குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" - திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2020-02-21 13:09 GMT
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டம் என்பது மத ரீதியாக மக்களை  பிளவுபடுத்தும் செயலாகும் என்று குற்றம் சாட்டினார். 
தமிழக  அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் முழுமையான சட்டமாக வர வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார். நீட் மற்றும் நெக்ஸட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் 23ம் தேதியன்று திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும்  மத்திய அரசு  அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்றும் வீரமணி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்