"ஆதரவற்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை"- சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா பேச்சு
டிஎன்பிஎஸ்சி அல்லாத அரசுப்பணிகளில் ஆதரவற்ற மற்றும் பாதுகாவலர் இல்லாமல் வளர்ந்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.;
டிஎன்பிஎஸ்சி அல்லாத அரசுப்பணிகளில் ஆதரவற்ற மற்றும் பாதுகாவலர் இல்லாமல் வளர்ந்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் அருகே நாமகிரிப்பேட்டையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில், வாகனம் பெறுவதற்கான ஆணையை வழங்கி அவர், சிறப்புரையாற்றினார். பின்னர், தமிழக அரசு பெண்களுக்கு அதிகளவில் சலுகைகளை வழங்கி வருவதாகவும், அதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர், கூறினார்.