"பிகில், இந்தியன்-2 என தொடரும் விபத்துகளால், படப்பிடிப்பு தளம் பாதுகாப்பானதா?" - வெங்கட் சுபா கேள்வி

பிகிலை தொடர்ந்து இந்தியன்-2 விலும் விபத்தை ஏற்படுத்திய படிப்பிடிப்பு தளம் பாதுகாப்பானதா என தயாரிப்பாளர் வெங்கட் சுபா சந்தேகம் எழுப்பியுள்ளார்.

Update: 2020-02-20 12:18 GMT
உதவி இயக்குநர் கிருஷ்ணா மறைவு குறித்து சமூக வலைதளத்தில் இரங்கல் பதிவிட்டுள்ள அவர், மிகவும் துரதிருஷ்டமான இந்த விபத்தில் இறந்தவர்களின் உடலை பார்க்க நிலவும் சட்ட சிக்கல்கள், சுழலும் வாழ்க்கை மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். பிகில், இந்தியன்-2 என தொடரும் விபத்துகளால், படப்பிடிப்பு தளம் பாதுகாப்பானதா என வெங்கட் சுபா சந்தேகம் எழுப்பியுள்ளார். இதற்கு மேலும், சரியான காப்பீடு திட்டங்கள் இன்றி திரைத்துறை தொடர்ந்தால் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளுவதற்கு  ஒப்பானது என அவர் விமர்சித்துள்ளார். இவற்றிற்கு மேலாக இறந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, குடும்ப நண்பர் மதனின் மாப்பிள்ளை என்பது ஆறாத சோகமாக படர்வதாக வெங்கட் சுபா இரங்கல் தெரிவித்துள்ளார். நூலிழையில் உயிர் தப்பிய கமல், இயக்குநர் சங்கர், தயாரிப்பு நிறுவன ஊழியர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில் இருந்து உதவுவது சிறிய அளவு ஆறுதலாக இருக்கிறது என அவர் பதிவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்