கொள்ளிடம் கதவணை திட்ட பணிகள் துரிதம் : டிசம்பருக்குள் கதவணை அமைக்கும் பணி முடிக்க திட்டம்
கடலூர் மாவட்டம் ஆதனூர் மற்றும் நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே சுமார் 463 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட கொள்ளிடம் கதவணை திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.;
கடலூர் மாவட்டம் ஆதனூர் மற்றும் நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே சுமார் 463 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட கொள்ளிடம் கதவணை திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியை பொதுப்பணித்துறையின் நிர்வாக பொறியாளர் தலைமையில்11 இணை பொறியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்ட தூண்கள் எழுப்பும் பணி இரவு - பகலாக 300 தொழிலாளர்கள் மூலம் நடைபெற்று வருவதாகவும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் முதற்கட்ட கதவணை அமைக்கும் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.